5 நிமிடங்களில் மஞ்சள் பற்கள் வெள்ளை நிறமாக மாறும்! இதோ டிப்ஸ்

Photo of author

By CineDesk

5 நிமிடங்களில் மஞ்சள் பற்கள் வெள்ளை நிறமாக மாறும்! இதோ டிப்ஸ்

நாம் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்க வேண்டும் என்று நம்மை சுற்றியுள்ள பெரும்பாலோனோர் எதிர்பார்ப்பார்கள்.அவர்களின் எதிர்பார்ப்பை போல நாம் புன்னகைக்கும் போது நமது பற்கள் மஞ்சள் நிறத்துடன் காட்சியளித்தால் எதிரில் உள்ளவர்களுக்கு எப்படி இருக்கும்.

இந்த மாதிரி பற்களில் உள்ள கறைகளை நீக்க நாம் எந்த மாதிரியான டூத் பேஸ்டை பயன்படுத்தினாலும் அதற்கு முறையான தீர்வு கிடைப்பதில்லை.அதற்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே இந்த கறையை நீக்கலாம்.

இந்த டிப்ஸை பயன்படுத்தி ,மஞ்சள் கலராக உள்ள பற்களை வெள்ளை நிறமாக வெறும் 5 நிமிடங்களில் மாற்றலாம். அழுக்கு மஞ்சள் பற்களை வெள்ளையாகவும் பளபளப்பாகவும் மாற்றும் இதற்கு தேவையான பொருட்களை வீட்டிலிருந்தே எடுத்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

எலும்பிச்சைச் சாறு,

மஞ்சள்,

டூத் பேஸ்ட்,

வெள்ளை பூண்டு,

உப்பு.

செய்முறை – 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் மஞ்சளை கலக்கவும். பின் அதனுடன் டூத் பேஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் வெள்ளைப் பூண்டை துருவி பொடி செய்து அதில் கலக்கவும்.இறுதியாக சிறிதளவு கல் உப்பை பொடியாக்கி நன்றாக கலக்கவும்.

பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அதை பற்களை துலக்க பயன்படுத்தவும். பற்களை தூலக்கிய பின் மாற்றதை நீங்களே உணர்வீர்கள். வாய் துர்நாற்றம், மஞ்சள் பல், சொத்தைப் பல் மற்றும் பல் கூச்சம் முதலியவற்றை இதன் மூலமாக நீக்கலாம்.