கண்களை சுற்றி கருவளையமா? இதை செய்யுங்க விரைவில் காணாமல் போகும்

Photo of author

By Gayathri

கண்களை சுற்றி கருவளையமா? இதை செய்யுங்க விரைவில் காணாமல் போகும்

Gayathri

Tips to Remove Dark Circle in Eyes

கண்களை சுற்றி கருவளையமா? இதை செய்யுங்க விரைவில் காணாமல் போகும்

சமைப்பதற்கு பயன்படுத்தும் உருளைகிழங்கை வைத்து இப்படிலாம் செய்யலாமா என்று சிந்திக்கும் வகையில் இதன் பயன்கள் உள்ளது.அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

கண்களில் கருவளையம் படிந்து இருப்பவர்கள் உருளைகிழங்கை வட்டமாக வெட்டி தூங்க செல்லும் முன் கண்களில் வைத்து கொண்டால் கருவளையம் நாளடைவில் காணாமல் போய்விடும்.

பெண்களுக்கு கழுத்தை சுற்றி கருப்பு நிறமாக இருக்கும் அதனை போக்க உருளைகிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து  அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு போட்டு கலந்து கழுத்தில் தடவி வர நாளடைவில் மறைந்துவிடும்.

உருளைகிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து  அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு ,மஞ்சள் தூள் சிறிதளவு போட்டு முகத்தில் மசாஜ் செய்து முகத்தில் பேஸ்பேக் போட்டு வர இறந்த செல்களை நீக்கி முகம்  பொலிவுபெரும் மற்றும் முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல பேஸ்பேக்.

மேலும் இது கருமை படிந்த முகத்தை பளிச்சென்று வைத்திடும். கரும்புள்ளிகளை அகற்றிவிடும்.

குழந்தைகளின் உடல் எடை  பிரச்சனை தீர்க்க உருளைக்கிழங்கு உதவும்.