பெண்களே! உடலில் உள்ள தேவையில்லாத முடிகளால் கூச்சமா? இதோ உங்களுக்கான தீர்வு

Photo of author

By CineDesk

பெண்களே! உடலில் உள்ள தேவையில்லாத முடிகளால் கூச்சமா? இதோ உங்களுக்கான தீர்வு

CineDesk

Updated on:

Tips to remove Hair in Face

பெண்களே! உடலில் உள்ள தேவையில்லாத முடிகளால் கூச்சமா? இதோ உங்களுக்கான தீர்வு

பெரும்பாலான பெண்களுக்கு உடலில் தேவையில்லா பகுதிகளில் இருக்கும் முடிகளால் சங்கடம் ஏற்படுவதுண்டு. சிலர் இதை அசிங்கமாகவும் நினைப்பதுண்டு. இனிமேல் அவர்களுக்கெல்லாம் கவலை வேண்டாம். குறிப்பாக அக்குள் பகுதி,மேல் உதடுகள் கண்ணங்களுக்கு பக்கத்தில் இருக்கும் முடிகளை நீக்க இந்த டிப்ஸை பயன்படுத்துகள்.முடிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

டிப்ஸ் 1:

தேவையான பொருள்கள்:

எலும்பிச்சை,

மஞ்சள் ,

சர்க்கரை.

செய்முறை:

சிறிதளவு எலும்பிச்சை சாற்றில் அரை ஸ்பூன் மஞ்சள் ,அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து முகத்தில் மற்றும் உடலில் தேவையில்லாத பகுதிகளில் முடி உள்ள இடத்தில் தடவி வந்தால் தேவையற்ற அந்த முடிகள் சீக்கிரம் உதிர்ந்து விடும்.

டிப்ஸ்2:
தேவையான பொருள்கள்:

கஸ்தூரி மஞ்சள்,

மைதா மாவு

மற்றும் பால்.

செய்முறை:

2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன் 2 ஸ்பூன் மைதா மாவை சேர்க்கவும்.பின் சிறிதளவு பால் சேர்த்து கலந்து முகத்தில் முடியுள்ள தடவவும்.30 நிமிடங்கள் கழித்து முகத்தில் தடவியது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்தால் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் அனைத்தும் உதிர்ந்துவிடும்.