பிபி எப்பொழுதும் கண்ட்ரோலில் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்!!

Photo of author

By Rupa

நீங்கள் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்றால் இங்கு சொல்லப்பட உள்ள தகவலை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்று இரத்த அழுத்த பாதிப்பை பலர் சந்திக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம்,தூக்கமின்மை,ஆரோக்கியம் இல்லாத உணவுகள்.

குறை இரத்த அழுத்தம்,உயர் இரத்த அழுத்தம் என்று இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.இதில் மிகவும் ஆபத்தானவை குறை இரத்த அழுத்தம்.இரத்த அழுத்தத்தை கவனிக்க தவறினால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

பொதுவாக 120/80 mm hg என்பது சராசரி இரத்த அழுத்தத்திற்கான அளவீடு ஆகும்.இந்த அளவை விட அதிகமாக இருந்தால் ஹைப்பர்டென்ஷன் ஏற்படும்.இதன் காரணமாக பக்க வாதம்,இதய நோய்,அதேபோல் 90/60 mm hg என்பது ஹைப்போடென்ஷன்(குறை இரத்த அழுத்தம்) ஏற்படும்.

இந்தியாவில் இரத்த அழுத்த பாதிப்பு அதிகரித்து வரும் நோயாக உள்ளது.இந்நோய் பாதிப்பு இருப்பவர்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

1)உண்ணும் உணவில் உப்பின் அளவு குறைவாக இருக்க வேண்டும்.அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் இரத்த அழுத்த அளவை அதிகரித்துவிடும்.

2)தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் சீரான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.இது இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

3)மன அழுத்தம் அதிகமானால் இரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.எனவே யோகா,உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முயலுங்கள்.

4)தினமும் நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.நல்ல தூக்கம் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.தூக்கம் சீர்குலைவதால் மன அழுத்தம் ஏற்படும்.இதனால் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் மேலே சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றி பிபியை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.