திருச்சி தி.மு.க ஒன்றிய செயலாளர் பாலியல் வெறிச்செயல்!! போக்சோவில் தேடும் போலீஸ்!!

Photo of author

By Vinoth

திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒரு தம்பதி தனது குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக கூறியுள்ளனர். அதில் நாங்கள் திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூரில் திமுக முன்னால் ஒன்றிய செயலாளர் அனந்தன் வீட்டு தோட்டத்தில் தின கூலிக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.

அதன்ப்படி நேற்று காலை நாங்கள் வேலைக்கு செல்லும் போது தனது குழந்தைகள் அழைத்து சென்றுள்ளனர். அதில் ஒரு குழந்தை 6-ஆம் வகுப்பும், இன்னொரு குழந்தை 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். நாங்கள் வயலுக்கு வேலைக்கு சென்ற பின்பு திமுக முன்னால் ஒன்றிய செயலாளர் அனந்தன் தனது குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த சம்பவத்தை 2 குழந்தைகளும் தனது பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் நாங்கள் 1098க்கு புகார் தெரிவித்தோம்.

அதன் பின்பு திருச்சி மாவட்ட குழந்தைகள் நல வாரிய மேற்பார்வையாளர் கலாவதி விசாரணை நடத்தியதில் அந்த சம்பவம் உண்மையில் நடந்தது என தெரிவிக்கபட்டது. அதனையடுத்து மகளிர் காவல் நிலையம் போலீஸ் அனந்தன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததது. இதனை அறிந்த திமுக முன்னால் ஒன்றிய செயலாளர் அனந்தன் தலைமறைவானார். மேலும் அவரை போலீஸ்சர் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.