Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!!

0
233
Tirumala Tirupati Devasthanams: Attention devotees going to Tirupati!! Darshan of Seven Hills canceled for 8 hours!!
Tirumala Tirupati Devasthanams: Attention devotees going to Tirupati!! Darshan of Seven Hills canceled for 8 hours!!

Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவர்.இலவச தரிசனம் என தொடங்கி விஐபி தரிசனம் வரை அதற்குரிய கால அவகாசத்தில் மக்களை முறையாக அனுமதித்து வழிபாடு செய்ய அனுமதிப்பது  வழக்கம்.புரட்டாசி சனிக்கிழமை போன்ற தினங்களில் மட்டும் விஐபி தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும்.

அதுமட்டுமின்றி கிரகண நாட்களில் நடை மூடுவது வழக்கமாக ஒன்று தான்.சமீபத்தில் தான் சூரிய கிரகணம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது சந்திர கிரகணம் ஆனது நாளை தொடங்க உள்ளது. இந்த சந்திர கிரகணத்தையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் எட்டு மணி நேரம் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த கிரகணப்பிடியில் சிக்காமல் இருக்கவே இவ்வாறு கோவில்களில் தளங்கள் மூடப்படுகிறது. மேலும் இம்முறை குரு பகவானும் இந்த கிரகணத்தில் பிடியில் இருப்பார் என்று ஆன்மிக ரீதியாக கூறுகின்றனர்.கிரகணம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே கோவில்களில் நடை மூடப்படும்.

அந்த வகையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் ஆனது 8 மணி நேரத்திற்கு மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.நாளை இரவு 7 மணிக்கு மூடப்பட்டு பின்பு அடுத்த நாள் காலையில் தான் நடை திறக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இந்த சந்திர கிரகணம் ஆனது இரவு ஒரு மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணி வரை நடைபெறும் என்று கூறியுள்ளனர். மேற்கொண்டு அன்று நடை மூடப்படுவதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி இலவச தரிசனம் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த நாள் தான் நடை திறப்பிற்கு பிறகு தான் ஏழுமலையானை வழிபட முடியும் என்று கூறியுள்ளனர்.

Previous articleநாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?
Next articleBJP: மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக அண்ணாமலை மீது வழக்கு பதிவு.. திடீர் கைது நடவடிக்கை?