அதிமுகவிற்குள் சித்து விளையாட்டை தொடங்கிய சசிகலா!

0
224

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நாளிலிருந்து தற்சமயம் வரையில் அதிமுகவில் பல பிரச்சனைகள் உண்டாகி வந்தாலும் கூட கட்சி உடைந்து டிடிவி தினகரன் சசிகலா உள்ளிட்டோர் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாகியிருந்தாலும் அதிமுக இன்று வரையில் பல சவால்களை சந்தித்து நிலைத்து நின்று வருகிறது. தற்சமயம் சசிகலா அரசியலில் இல்லை என அறிவித்து இருந்தாலும் அவர் அதிமுகவை அபகரிக்க நினைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற மானூர் அதிமுக நிர்வாகிகளின் பெயரில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சுவரொட்டியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வத்தை கேட்காமல் ஏதேனும் முக்கிய முடிவை எடுத்தால் கட்சியின் தலைமை அலுவலகத்தை நாங்கள் முற்றுகையிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்த சுவரொட்டிகள் இணையதளத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அதோடு அந்த பகுதியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சுவரொட்டியை வேண்டுமென்றே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தயாரித்து பதிவு செய்தார்களா என்பது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்து இருப்பதாக தெரிகிறது.

Previous articleஇதற்கு மத்திய அரசுதான் காரணம்! பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்கு!
Next articleஎந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் பளிச் பேட்டி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here