இத்தனை கோடி கடனும் கமலால் தான்.. எங்களை முழுவதும்  ஏமாற்றிவிட்டார்!! தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார்!!

0
259
Tirupati Brothers Company reported on Kamal
Tirupati Brothers Company reported on Kamal

இத்தனை கோடி கடனும் கமலால் தான்.. எங்களை முழுவதும்  ஏமாற்றிவிட்டார்!! தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார்!!

இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சேர்ந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனம்தான் திருப்பதி பிரதர்ஸ்.இந்த நிறுவனத்தின் மூலம் தற்பொழுது வரை பையா தீபாவளி வேட்டை பட்டாளம் கும்கி இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.அதன் வரிசையில் உத்தம வில்லனும் ஒன்று.உத்தமவில்லன் படத்திற்கு முன்பாக சூர்யா நடித்த அஞ்சான் படத்தை வெளியிட்டனர்.

ஆனால் அது இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிவாகை சூட வில்லை.இதனால் அவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகினர் அது முடிவதற்குள்ளேயே உத்தம வில்லன் படத்தை வெளியிடுவதற்காக உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் கடன் வாங்க நேரிட்டது.ஆனால் சரியான நேரத்தில் படம் வெளியிட முடியாத காரணத்தினால் இதுவும் மேற்கொண்டு இவர்களுக்கு கழுத்தை நெருக்கும் அளவிற்கு கடனை தான் கொடுத்தது.

இதனையடுத்த ரஜினி முருகன் திரைப்படமும் வெளியாகுவதில் தாமதமானாளும் மற்ற படங்களை காட்டிலும் இது அவர்களுக்கு வெற்றியை தான் கொடுத்தது.போதிய கடனை அடைத்த போதிலும் அதிலிருந்து அவர்களால் முழுமையாக மீள முடியவில்லை.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சினிமா வட்டத்திலும் இவர்கள் அதிக கட ன் சுமையை பெற்றதற்கு உத்தம வில்லன் படம் தான் காரணம் என்று பேசி வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமானது தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, முதலில் நாங்கள் கமல்ஹாசன் அவர்களை மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கத்தான் அணுகியிருந்தோம். மல்ஹாசன் அந்த ரீமேக் மூவியில் நடிக்க மாட்டேன் என்று எங்களிடம் கூறிவிட்டார்.அதற்கு மாறாக என்னிடம் ஒரு கதை உள்ளது அதில் வேண்டுமானால் நடிக்கிறேன் என்று கூறினார்.

நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டு பட வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டோம்.ஆனால் எங்களிடம் ஒப்புதல் பெற்ற ஒரு வாரத்திலேயே மலையாள படமான திரிஷ்யம் ரீமேக்கில் வேறொருவருக்கு நடித்து தருகிறேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது நான் உங்களிடம் சொன்ன கதையினை இயக்கி தருவதாகவும் அதில் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அதன் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் எனவும் ஒப்புக்கொண்டார்.

இவர் சொன்னதை வைத்து உத்தம வில்லன் படத்தை தயாரித்தத்தில் மேற்கொண்டு அது நஷ்டத்தையே கொடுத்தது தயாரிப்பு வேலையின் போதே கமல் மீது பல தடைகள் போடப்பட்டதால் பல சிக்கல்களிலிருந்து இந்த படத்தை வெளியிட்டோம். இதற்காக அதிகளவு கடன் வாங்க நேரிட்டது.மேற்கொண்டு இது குறித்து நாங்கள் அவரிடம் பேசுகையில் அவரது அண்ணன் சந்திரஹாசன் 30 கோடி பட்ஜெட்டில் இதனை ஈடுகட்டும் வகையில் ஒரு படத்தை எடுக்கலாம் என்று கூறினார்.

அதற்காக ஒப்புதல் கடிதத்தையும் எங்களிடம் கொடுத்தனர்.தற்பொழுது உத்தம வில்லன் வெளியாகி 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதனை கமல்ஹாசன் அவர்கள் நிறைவேற்றி தரவில்லை மேற்கொண்டு உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து  கடன் வாங்கி இந்த படத்திற்காக செலவு செய்ததால் தற்பொழுது நிதி நெருக்கடியில் உள்ளோம் என கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.