திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடாசலபதியை மூத்த குடிமக்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் 30 நிமிடங்கள் வரை இலவசமாக தரிசனம் செய்ய புதிய சிறப்பு சலுகை ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.
65 வயது மதிக்கத்தக்க மூத்த குடிமக்கள் நிம்மதியாகவும் எந்த வித கூட்ட நெரிசலும் இன்றி பெருமாளை தரிசிக்க தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணி என இரண்டு நேரங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த இரண்டு நேரங்களிலும் மூத்த குடிமக்கள் மட்டுமே பெருமானை தரிசிக்க முடியும் என்றும் அந்த நேரத்தில் மற்ற வரிசைகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாது 30 நிமிடங்கள் வரை பெருமானை தரிசிக்கலாம் என்றும் இதனோடு கூடவே இன்னும் பல சலுகைகளையும் திருப்பதி தேவஸ்தானம் வழங்கி இருக்கிறது. அவை பின் வருமாறு,
✓ பார்க்கில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்குள் உள்ள கவுண்டரை அடைவதற்கு பேட்டரி வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
✓ மூத்த குடிமக்களின் தரிசனத்தின் பொழுது அவர்களுக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் சூடான பால் போன்றவை இலவசமாக தேவஸ்தானம் தரப்பில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தரிசனத்திற்கு விண்ணப்பிக்க புகைப்படத்துடன் கூடிய வயது சான்றிதழை எஸ் ஒன் என்ற கவுண்டரில் சமர்ப்பித்து இந்த இலவச தரிசனத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிலும் குறிப்பாக புகைப்படத்துடன் கூடிய வயது சான்றிதழை தட்சிண மடத்தெருவில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்கு அருகில் உள்ள நுழைவு வாயிலில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மூத்தக்குடி மக்கள் இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால் திருப்பதி தேவஸ்தானத்தினுடைய 08772277777 என்ற அழைப்பிற்கு அழைத்து உங்களுடைய சந்தேகங்களை போட்டி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.