Tirupati : திருப்பதி தேவஸ்தானமானது பக்தர்களின் தேவைக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட விஐபி தரிசனம் செய்யும் டிக்கெட்டுக்கு வரைமுறை வகுத்தது. இதனையடுத்து தற்பொழுது திருப்பதி தேவஸ்தான முதன்மை செயலாளர் பக்தர்களுக்குரிய வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளார். அதில் பக்தர்கள் பயன்படுத்தும் குளியல் அறைகளில் குழாய்கள் உடைந்தும் மொட்டை அடிக்கும் இடத்தில் சுத்தமின்றியும் காணப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த முதன்மை செயல் அலுவலர் இதனை மாற்றியமைக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார். எந்தெந்த கழிவறைகள் உள்ளிட்ட இடங்களில் குழாய்கள் சேதமடைந்துள்ளது அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதேபோல மொட்டை போடும் இடம் எப்பொழுதும் சுத்தமாக பராமரிப்பாக இருப்பது அவசியம். மொட்டை அடித்து விட்டு குளிக்க செல்லும் பக்தர்களுக்கு முறையான விண்ணில் கிடைக்கவில்லை என்ற புகார் வந்துள்ளதால் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பக்தர்களுக்கு முழு நேரமும் வெந்நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெந்நீர் வரும் இயந்திரங்கள் ஏதேனும் பழுதடைந்து கிடந்தால் அதனை மாற்றி அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள பொருட்கள் அனைத்தும் உயர்ரக விலையில் விற்கப்படுவதாக புகார் வந்த நிலையில் அதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார். நீண்ட நேரம் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு கூடுதலாக இரண்டு கவுண்டர்கள் மூலம் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.