திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு!! உடனே புக் பண்ணுங்க!!
பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது.
இவ்வாறு இருக்கும் கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.
மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகின்றது.
மேலும் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிப்பதற்கான டிக்கெட்டை இப்பொழுது வேதஸ்தானம் வெளியிட்டு வருகின்றது. இதனை பக்தர்கள் 90 நாட்களுக்கு முனதாகவே முன் பதிவு செய்து கொள்ளும் வசதியை கோயில் நிர்வாகம் தற்பொழுது வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடக்கவிருக்கின்ற சுப்ரபாதம் ,தோமாலை ,அர்ச்சனை ,அஷ்டதள பாதமாரதன போன்றவை நடத்தப்பட உள்ளதால் அதற்கான டிக்கெட்களை முன்னதாகவே முன் பதிவு செய்து கொள்ளலாம்.
அக்டோபர் மாதத்தில் நடக்கவிருக்கின்ற அங்கப்பிரதட்சணத்திற்கான டோக்கன்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்பட்டும்.மேலும் பக்தர்கள் தனக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு கோவில் நிருவாகத்தின் இணையதள சேவையை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுமாறு வேதஸ்தானம் கூறியுள்ளது.
எனவே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் 300 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு நுழைவு தரிசனதிற்கான டிக்கெட்களை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஏழுமலையானை தரிசிக்க நுழைவு தரிசன டிக்கெட்களை பெற விரும்பும் பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதள பக்கத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று வேதஸ்தானம் தெர்வித்துள்ளது. இதனை தொடர்ந்து முதியோர் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும் மாலை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.