திருப்பதி சிறப்பு ரயில்  சேவை இந்த தேதிகளில் ரத்து!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!

0
109
Tirupati special train service canceled on these dates!! Information released by Southern Railway!!
Tirupati special train service canceled on these dates!! Information released by Southern Railway!!

திருப்பதி சிறப்பு ரயில்  சேவை இந்த தேதிகளில் ரத்து!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது.

பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை  பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

இந்த நிலையில் சில ரயில்கள் பராமரிப்பு பணிக்காக அடிக்கடி  ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று. மேலும் அடிக்கடி ரயில் ரத்து செய்யவடுவதால் பொதுமக்கள் பலர்  இன்னல்களை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திப்பதி செல்லும் ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் அந்த தகவலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த மாற்றம் செய்யப்பட்ட வாடி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும் காலை 10. 55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மறு மார்க்கமாக காட்பாடியில் இருந்து திருப்திக்கு தினமும் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை 6 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.

அதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் காலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் இன்று முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை காட்பாடியில் நிறுத்தப்படும். மேலும் பராமரிப்பு பணி முடிந்த உடன் வழக்கம் போல் ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டு ரயில் சேவை துவங்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Previous article2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!
Next articleதிரெட்ஸ் செயலி பயன்பாடு குறைவு!! வேதனை தெரிவித்த மெட்டா நிறுவனம்!!