திரெட்ஸ் செயலி பயன்பாடு குறைவு!! வேதனை தெரிவித்த மெட்டா நிறுவனம்!!

0
44
Threads app use less!! Meta company expressed grief!!
Threads app use less!! Meta company expressed grief!!

திரெட்ஸ் செயலி பயன்பாடு குறைவு!! வேதனை தெரிவித்த மெட்டா நிறுவனம்!!

த்ரெட்ஸ் என்ற செயலியை ஜூலை 6  ஆம் தேதி மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது.

அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் அதில் இணைந்திருனதர்கள்.  மேலும் இந்த செயலி மூலம் ட்விட்டர் போல தங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் பிற கணக்குகளை பின்தொடரவும் முடியும் என்றும், ஒரு கருத்தில் 500 வார்த்தைகளை பதிவிட முடியும் என்றும், ட்விட்டரை விட அதிக வசதிகள் உள்ளது.  இதனை பற்றிய தகவலை மெட்டா சொந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து 10 நாட்களில் த்ரெட்ஸ் 15  கோடி பயனர்களை கடந்தது.   இந்த செயலியை  இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக கணக்கு தொடங்கலாம் என்பதால் மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது மெட்டா நிறுவனம்  த்ரெட்ஸ் செயலியில் புதிய அப்டேட்டை அறிமுகபடுத்தியது. அந்த அப்டேட்யில் ரிப்ளை, ரிபோஸ்ட், லைக், சேர் போன்ற வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் குறுந்தகவல் பரிமாறும் அம்சங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

ஆனால் இதன் பயன்பாடு தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வந்துள்ளது. மேலும் ஜூலை 18 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதியில் இந்த செயலின் பயன்பாடு மிகவும் முறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இதன் பயன்பாடு 22% சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது நிறுவனம் வெளியிட்ட தகவல் படி, அந்த செயலியை இந்தியா -28 % அமெரிக்கா- 13, ஜப்பான்- 4% , பிரேசில்-  13% மற்றும் மெக்சிகோ- 5% போன்ற நடுகல் அதிகம் பதிவிர்ரம் செய்யப்பட 5 நாடுகள். ஏற்கனவே அந்த செயலி ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது என்று இணையத்தில் செய்தி பரவி வந்தது.

இந்த நிலையில் திரெட்ஸ்  செயலி அறிமுகம் ட்விட்டர் பயன்பாட்டில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், ட்விட்டர் பயன்பாடு தற்போது அதிகரித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த திரெட்ஸ் செயலி 100 நாடுகளில் ஆப்பிள் கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jeevitha