ஒரு வயது குழந்தையை தூக்கில் போட்ட தாய்! கணவனுடன் நடந்த சண்டையால் ஏற்பட்ட கொடூர சம்பவம்..!!

0
141

ஒரு வயது குழந்தையை தூக்கில் போட்ட தாய்! கணவனுடன் நடந்த சண்டையால் ஏற்பட்ட கொடூர சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற மகன் உள்ளார். தனியார் நிறுவன குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரபாகரன், வேலையின் காரணமாக தனது குடும்பத்தை வாடிப்பட்டியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு அவிநாசி அருகிலுள்ள பெரியாயி பாளையத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறினார்.

இதனையடுத்து கணவனுக்கும், மனைவிக்கும் ஏற்கனவே குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளது. நேற்று வழக்கம் போல இருவருக்கும் சண்டை அதிகரித்து மனைவியை பிரபாகரன் திட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அன்று மாலை வரை அவரது வீடு திறக்கவே இல்லை. கிராமம் இரவை நோக்கி நகர ஆரம்பித்தும் வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் பிரபாகரன் வீட்டு அருகிலுள்ளவர்கள் சந்தேகமடைந்து கதவை தட்டிப்பார்த்தனர்.

பின்னர், கதவை திறந்து பார்த்தில், பிரபாகரன் மனைவி துர்கா தேவியும், அவரது ஒரு வயது குழந்தையும் தூக்கில் தொங்கியவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினர். சம்பவம் குறித்து உடனடியாக அவிநாசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையினால் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. ஒரு வயது குழந்தையை முதலில் தூக்கில் தொங்கவிட்டு பின்னர் தானும் தூக்கில் தொங்கி இருக்கலாம் என்கிற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு
Next article1957-ம் ஆண்டு திருடப்பட்ட ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு! சிலையை திருடிச் சென்றது யார்..?