திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!!

0
177

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!!

பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற சொகுசு பேருந்து கட்டுபாட்டை இழந்த லாரியின் மீது மோதியதால் கோர விபத்து நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணா குளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி 48 பயணிகளுடன் சொகுசு பேருந்து புறப்பட்டது. இதேபோல் டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு கேரளாவில் இருந்து சேலம் நோக்கி ஒரு கன்டெய்லர் லாரி வந்து கொண்டிருந்தது. இவ்விரண்டு வாகனங்களும் இன்று அதிகாலை நேரத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பலத்த வேகத்துடன் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்த விசாரணையில் அதிகாலை நேரத்தில் வாகனம் ஓட்டிய லாரி டிரைவர் அரை தூக்கத்துடன் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கன்டெய்னர் லாரி சென்டர் மீடியன்களை உடைத்துக் கொண்டு எதிர் வழித்தடத்திற்கு சென்றதால் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி கோர சம்பவம் நடந்துள்ளது.

இந்த கோர சம்பவம் பொதுமக்களிடம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Previous article3 பேரின் உயிரைக் குடித்த விபத்து!இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபரீதம் !
Next articleகோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு?