சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்தவருடம் வெளியாக இருக்கும் சூரியாவின் 44-வது திரைப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா மற்றும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிகர் ஜெயராம், கருணாகரன், ஜோதி, ஜார்ஜி நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யா, ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது. இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசைமைப்பாளர் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படம் முழுமையாக நிறைவான நிலையில் தற்போது படத்தின் டைட்டில் டீசர் வெளியகயுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
மேலும் இந்த படத்திற்கு ‘ரெட்ரோ’ பெயர் வைக்கபட்டுளது. இப்படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஓடிடியில் ‘மகான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் சூர்யாவுடன் கார்த்திக் சுப்புராஜ் இணைவதால், இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.