உடைந்தது அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் தலைமை!

0
63

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து இருந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தற்சமயம் அதிமுக கூட்டணியில் இல்லை என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இந்த கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகவே அந்த கட்சி இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆகியிருந்தது .அதன்படி சென்னை எழும்பூர் சட்டசபை தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிட்டார்.சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற ஜான் பாண்டியன் தோல்வியை தழுவினார். தன்னுடைய தேர்தல் தோல்வி தொடர்பாக தற்போது அவர் கருத்து தெரிவித்த நிலையில், நேற்றைய தினம் திருநெல்வேலியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவருடைய தோல்வி தொடர்பாக பதில் தெரிவித்திருக்கின்றார்.

நேற்றைய தினம் நெல்லையில் நடந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் ஆலோசனை செய்தார். அந்த கூட்டத்தில் சமீபத்தில் முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. அதோடு மத்திய அமைச்சராக பாஜகவின் முன்னாள் தலைவர் முருகன் பதவி ஏற்றதற்கு பாராட்டு போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

அந்த கூட்டமானது முடிவுற்ற பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நீடித்து வருகிறது. ஆனாலும் கூட்டணி என்பது தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பித்த அதிமுக அரசுக்கும் மற்றும் மத்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசுக்கும் நன்றியை தெரிவிக்கும் விதத்தில் தான் நாங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபைத் தொகுதிகளிலும் நான் நேரடியாகவே சென்று தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தாலும் நான் தோல்வியை தழுவ வேண்டும் என்று எனக்கு எழும்பூர் சட்டசபைத் தொகுதியை ஒதுக்கி என்னை பழிவாங்கி இருக்கிறார்கள் என ஜான்பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.