ஓஹோ., இதற்காக தானா இந்த குறியீடு ‘சொல்லவே இல்ல’!! மிக முக்கியமான தகவல்!!

0
94

மத்திய அரசால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு எந்தவித மானியமும் கிடையாது.

அனைவரின் வீட்டிலும் சிலிண்டர் என்பது, கிராமப்புறங்களில் மிகவும் அவசியமான ஒன்றாகும். சிலிண்டர் நம் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாம் சிலிண்டர் புக் செய்தால் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி செய்துவிடுவார்கள். இவ்வாறு டெலிவரி செய்யப்படும் கேஸ் சிலிண்டர் காலாவதி தேதி எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதனை பற்றி தற்போது பார்க்கலாம்.

சிலிண்டரை A-07,B-06 என எழுதப்பட்டிருக்கும். A என்பது ஜனவரி முதல் மார்ச் வரைக்கும் ஆகும். மேலும், B என்பது ஏப்ரல் முரளி ஜூன் வரைக்கும், அதனை அடுத்து C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும் மற்றும் D என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும் ஆகியன அடுத்து உள்ள இரண்டு எண்கள் அதனுடைய வருடத்தைக் குறிக்கும்.

உதாரணமாக சிலிண்டர் B-21 என்று இருந்தால் அங்கு சிலிண்டரில் 2021 ஜூன் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அர்த்தமாகும். இதன் மூலமாக கேஸ் சிலிண்டர் வாங்கும் பொதுமக்கள் அது எத்தனை நாட்களுக்கு காலாவதி ஆகாமல் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் அத்தியாவசியமான சிலிண்டரை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். எனவே இதன் மூலமாக அனைவரும் சிலிண்டரின் உள்ளே எழுத்துக்களில் அடங்கியுள்ள விவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.