சிவாஜி பாடலுக்கு அழுது கொண்டே பாடிய டிஎம்எஸ்!

எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்கும் அப்படியே பொருந்தி விடும் ஒரு குரல் என்றால் அது டி எம் எஸ் சௌந்தரராஜன் குரல் . அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருந்தது. சிவாஜியே பாடுவது போல இருக்கும் டி எம் எஸ் அவர்கள் பாடும் பொழுது.

 

அப்படி பாடலை பாடும் பொழுது அழுது கொண்டே பாடி இருக்கிறார் டி எம் எஸ் அதன் காரணம் என்ன தெரியுமா?

 

பாகப்பிரிவினை 1959 ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். படம் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

 

சிறுவயதிலேயே மின்சாரம் தாக்கி ஒரு கை செயலிழந்த கண்ணையன். படிப்பறிவு இல்லாமல் வளர்கிறான். இவனுடைய தம்பி நல்ல படித்தவராக வளர்கிறான். ஆனால் வஞ்சகத்தில் சேர்க்கிறான். பின் எப்படி வஞ்சகத்திலிருந்து மீள வைப்பார் என்பது பற்றி தான் கதை.

 

இந்த படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். பி சுசிலா, டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தன் ஆகியோர் பலரும் இந்த பாடல்களை பாடியுள்ளனர்.

 

இதில் ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடலை டிஎம்எஸ் சௌந்தரராஜன் பாடியிருப்பார். கண்ணதாசன் வரிகள். இந்த பாடலை பாடும் பொழுது டிஎம்எஸ் அவர்கள் அழுது கொண்டே பாடினாராம். அந்த சமயம் டிஎம்எஸ் சௌந்தரராஜன் அவர்களின் மகன் சமீபத்தில் காலமானதால் அந்த பாடலை பாடும் பொழுது கண்ணீர் வடித்துக் கொண்டே பாடியுள்ளார்.

 

இன்றைக்கும் அந்த பாடலை நாம் கேட்கும் பொழுது நமக்கே கண்ணீர் வரும் அளவிற்கு தான் இந்த பாடல் இருக்கும்.

 

கண்ணதாசனின் வரிகள் ஒவ்வொன்றும் நம் மனதை பிழிந்து கண்களில் நீரை தானே

வரவழைக்கும்.

 

“ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

 

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க

இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க

இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?”

 

 

“கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்

காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா

காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை

கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?”