தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் உடன் சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்சமயம் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றது. நேற்றைய தின விவாதத்தின்போது பாஜகவின் சட்டசபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உரையாற்றினார்.
சட்டசபையில் அவர் உரையாற்றும்போது அன்னை காலமாக திமுக தலைமையிலான தமிழக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தமிழக அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதாக தெரிவித்து இருக்கின்றார். அதோடு பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண் கவிஞர்களில் ஒருவர் எழுதிய கவிதைகளில் ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ் என்ற வரி வரும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பிறகு ரோஸுக்கு உதராணமாக மத்திய அரசு, ஒன்றிய அரசு விவாதத்தை தெரிவித்து கூறியிருக்கின்றார். அதோடு எப்படி அழைத்தாலும் ரோஜாவின் வாசனையை மாற்ற இயலாது எனவும், தெரிவித்திருக்கிறார். அந்த சமயத்தில் குறுக்கிட்டு உரையாற்றிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோஸ் இஸ் எ ரோஸ் என தான் நாங்களும் தெரிவிக்கின்றோம் அதை மல்லிகை என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லையே என்று தெரிவித்தார்