சென்னை உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக பாஜக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. ஒரு மேயர், பத்து நகராட்சி தலைவர்கள், 100 வார்டு கவுன்சிலர்கள், பதவியை பிடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வியூகம் அமைக்கப்பட்டு இருக்கிறதாம். தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க தீவிரமான முயற்சிகளை பாஜக செய்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் பாஜகவின் மாநில தலைவர் முருகன் தலைமையில் சட்டசபைக்குள் பாஜக மீண்டும் அடி எடுத்து வைக்கும் சூழல் ஏற்பட்டது,
இதற்குப் பின் அண்ணாமலை தலைமையில் தமிழ்நாட்டில் பாஜகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு அந்த கட்சியின் மேலிடம் திட்டம் வகுத்து இருக்கிறது. அதற்காக எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பாக கவனம் செலுத்தப்படுகின்றது. செப்டம்பர் மாதம் விடுபட்டு இருந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலும் டிசம்பர் மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெற இருக்கின்றன. இந்த தேர்தலில் ஒரு மேயர் பத்து நகராட்சித் தலைவர்கள் 100 வார்டு கவுன்சிலர்கள் பதவியை பிடிப்பதற்கு பாஜக முனைப்பாக இருக்கிறதாம்.
தற்சமயம் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் கூட தனிப்பட்ட விதத்தில் இத்தனை படங்களையும் பிடிப்பதற்கு பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் அனேக பிரச்சனைகள் தலைதூக்கி இருக்கின்றன. இந்த நிலையில், அதுவும் எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு விவகாரத்தில் சிக்கி இருக்கின்ற சூழலில் அதிமுகவுடன் கூட்டணியிலிருந்து விலகி பாஜக தனித்து போட்டியிட்டாலும் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை என்று கூறப்படுகின்றது.
அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாகவே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்ததை பாஜக இன்னமும் மறக்கவில்லை என்கிறார்கள். அந்த கோபம் இப்போது வரையில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றது. உங்களால் தான் எங்களுக்கு தோல்வி கிடைத்தது என்று ஒரு சிலர் பதிலடி கொடுத்தாலும் கோபம் என்னவோ அதிமுகவின் மேலிடம் மீது தான் பாஜகவிற்கு இருக்கிறது என்கிறார்கள்.
அதன் காரணமாக தான் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கூட அதிமுகவை பாஜக மேலிடம் கைவிட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் உள்ளாட்சித் தேர்தலில் கூட அதிமுக அதை கண்டுகொள்ளாமல் பாஜக தன்னுடைய வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. முன்னரே தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட தனி குழுவை அமைத்து இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஒரு வேலை அதிமுக கூட்டணியில் தொடர்ந்தால் கோயம்புத்தூர், திருப்பூர், நாகர்கோவில், உள்ளிட்ட 3 நகராட்சிகள் அதிமுகவிடம் இருந்து கேட்டு வாங்கும் எண்ணத்திலும் தமிழக பாஜக இருக்கிறது.
இருந்தபோதிலும் கோயமுத்தூர் அதிமுக தரப்பில் கொடுக்காவிட்டால் திருப்பூர் மற்றும் நாகர்கோவிலில் போட்டியிட பாஜக முனைப்பாக இருக்கிறது என்று சொல்லப்படுகின்றது. இப்படியான சூழ்நிலையில், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தன்னுடைய சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். நாளை முதல் மாவட்டம் வாரியாக இந்த சுற்றுப்பயணத்தை அவர் தொடங்கிய இருக்கின்றார். அந்தந்த மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் கட்சி நிர்வாகிகள் வீட்டிற்கு செல்லுதல் போன்ற பல நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் அண்ணாமலை 10:00 மணி அளவில் பாவூர்சத்திரத்தில் நடக்கும் செயல் வீரர்கள் கூட்டத்தில் பிற்பகல் 12 மணி அளவில் தென்காசியில் நடக்கும் சமுதாய தலைவர்கள் கூட்டத்திலும் பங்கு கொள்கின்றார். அதன் பின்னர் நிறகட்டும் சேவலின் புலித்தேவன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறார். மாலை 4 மணி அளவில் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் இருக்கின்ற ஆடிட்டோரியத்தில் மாணவ மாணவிகளை அவர் சந்திக்கிறார். மாலை 7 மணி அளவில் சங்கரன்கோவில் கிளை பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் அண்ணாமலை.
இந்த நிலையில், நாளை மறுநாள் காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மூன்றாம் மயில் அருகில் நடக்கும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி நகரத்தில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு கூட்டத்திலும், காமராஜர் கல்லூரியில் நடக்கும் கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திருநெல்வேலி வருகைதரும் அண்ணாமலை வா ஊ சி அவர்களின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நினைவு மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துகிறார். திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சட்டசபை பாஜகவின் குழுத் தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
தொடர்ச்சியாக அண்ணாமலை விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்கின்றார். ஆறாம் தேதி தர்மபுரியிலும் பதினோராம் தேதி பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழாவிலும் அவர் பங்கேற்கிறார். 14ஆம் தேதி கள்ளக்குறிச்சியிலும் 15ஆம் தேதி மயிலாடுதுறையில் 16ஆம் தேதி விழுப்புரத்தில் மற்றும் 17ஆம் தேதி 18 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார்.
அதன் பிறகு வரும் 19ஆம் தேதி வட சென்னை கிழக்கு 20ஆம் தேதி திருவள்ளூர் 22ஆம் தேதி மதுரை புறநகர் 24 ஆம் தேதி சென்னை மேற்கு 26 தேதி கன்னியாகுமரி 27 தேதி சிவகங்கை மற்றும் 28தேதி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் 29 தேதி கோயம்புத்தூர் தெற்கு மாவட்டம் என மாவட்டம் தோறும் செயல்வீரர்கள் கூட்டம், சமுதாய தலைவர்கள் சந்திப்பு என்று கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டங்கள் எல்லாமே தமிழக பாஜகவிற்கு பலத்தை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.