பெற்றோர்களே நம்புங்க! மாணவர்கள் மீது உங்களுடைய அக்கறை எங்களுக்கும் இருக்கிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

0
97

மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்பது கட்டாயமில்லை காலை ஒன்பது முப்பது மணி அளவில் பள்ளி தொடங்கி மாலை மூன்று முப்பது மணி வரையில் வகுப்புகள் நடக்கும் வாரத்தில் ஆறு தினங்கள் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கின்றார். அதே போல ஒரே நாளில் 5 வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுக்கப் படும். விளையாட்டு நேரம் ஒதுக்க படாது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.

மாணவர்களுடைய பாதுகாப்பை தமிழக அரசு நிச்சயம் உதவி செய்யும் என்ற காரணத்தால், தைரியமாக மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றோர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கடைசியாக சென்ற ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறைந்த தினங்களே பள்ளிகள் நடைபெற்றன. இந்த நிலையில், மறுபடியும் நோய் தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து பள்ளிகள் மறுபடியும் மூடப்பட்டன. இந்த சூழ்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாளையதினம் தமிழ்நாடு முழுவதும் மறுபடியும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் இருக்கின்ற மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் இருக்கின்ற எல்லா பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் ஆகவே பெற்றோர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் எந்தவிதமான பயம் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.. ஒவ்வொரு மேடையிலும் தலா இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். ஆகவே பெற்றோர்கள் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் மாணவர்களுடைய பாதுகாப்பை அரசு நிச்சயம் உறுதி செய்யும் பெற்றோருக்கு நிகரான அக்கறையை மாணவர்கள் மீது தமிழக அரசும் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ஆரம்பம் முதலே பாடம் நடத்த வேண்டாம் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னர் தான் பாடம் நடத்தப்படும். மாணவர்கள் கவசம் அணியாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலும் பள்ளியில் முகக்கவசம் தரவேண்டும் தொண்ணூற்று ஐந்து சதவீத ஆசிரியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள். தடுப்பூசிகள் செலுத்திய பின்னரே ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரவேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.