செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

0
172

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொரோனா தடுப்புப் பணி மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிடுவதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். யாரும் வீட்டை விட்டு கூட வெளியே வரக்கூடாது என்று தடை உத்தரவை பிறப்பித்து விட்டு முதல்வர் மட்டும் ஊர் சுற்றி வருகிறார் என்பது போன்ற விமர்சனங்கள் எதிர்க்கட்சியினர் இடையே எழ தொடங்கின.

ஆனால் எதிர்க்கட்சி என்னதான் விமர்சனம் செய்தாலும் தமிழக மக்களிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டானது அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.இதனை கண்ட எதிர்க் கட்சியான திமுக விரக்தியின் காரணமாக, அதிமுகவை பலவாறு விமர்சனம் செய்தது ஆனால் எதையுமே கண்டுகொள்ளாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திப்பதையும் அவர்களிடம் குறைகளை கேட்டறிவதையும் கண்ணும் கருத்துமாக செய்து வந்தார்.அதற்கான பலன் விரைவில் கிடைக்கவிருக்கிறது விரைவில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த விதத்தில் கரூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சர் தெரிவித்ததாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோர் இந்த மண்ணில் இருந்து மறைந்து இருந்தாலும் கூட தமிழக மக்கள் மனதில் இன்று வரையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு நம்முடைய கட்சியில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் பதவிக்கு வரலாம். கட்சியின் கடைக்கோடி தொண்டன் கூட அமைச்சர் பொறுப்பிற்கு வரலாம். நம்முடைய கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவிகள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் எதிர்க்கட்சியான திமுகவில் அப்படி இல்லை திமுக என்பது ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டது.அந்த கட்சியில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அந்த கார்ப்பரேட் நிறுவனத்தில் செந்தில்பாலாஜி தற்சமயம் முதலீடு செய்திருக்கிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். அதோடு ஸ்டாலின் சுய புத்தியோடு எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலாது என திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சின்னசாமி தெரிவித்தார்.அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Previous article”பெண்களின் இடுப்பு 8 போல் வளைவு நெளிவுடன் இருந்ததாம்” – தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சையாக பேசிய பிரபலம்
Next articleஇனி 5 இல்ல 1 தான்!! அதிர்ச்சியில் வாகன ஓட்டுனர்கள்!!