சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த கட்சி மட்டுமே சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் இருந்து வருகிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 159 இடங்களில் அந்தக் கூட்டணி வெற்றி அடைந்து இருக்கிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் அந்த கட்சி தனித்து சுமார் 66 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றியடைந்து வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சட்டசபை சட்டசபை கட்சித் தலைவராக திமுகவின் சட்டசபை உறுப்பினர்களால் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின்.
ஆகவே முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு ஸ்டாலினை அழைப்புவிடுத்தார் ஆளுநர். இந்த நிலையில், இன்று சென்னை கிண்டியில் இருக்கின்ற ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார் அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள் நோய் தொற்று பாதிப்பு காரணமாக எளிமையான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.