முதல்வரான உடன் முதல் கையெழுத்து எதில் இட போகிறார் ஸ்டாலின்?

0
89

தமிழகத்தின் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியில் அமர இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கட்சி 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது அதோடு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அந்த கூட்டணி ஆனது 159 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

எப்படியும் இந்த முறையும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சி செய்த அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தான் சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கான சட்டசபை உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை விடுத்தார். இதனைத்தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.இவ்வாறான சூழ்நிலையில், அவர் பதவியேற்றவுடன் முதலில் எந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏற்கனவே அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆகவே ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு நோய்த்தொற்று பரவல் நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் மிக முக்கியமான திட்டமாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மாதம் மூன்றாம் தேதி செயல்படுத்துவதற்கு ஆயத்தமாக இருப்பதாக ஸ்டாலின் முன்னரே அறிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில்,பதவியேற்றவுடன் கருணாநிதி, பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்டோரின் நினைவு இடங்களுக்குச் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு கோட்டைக்குச் சென்று அங்கே முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தவுடன் மூன்று முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதாவது நோய்த்தொற்று நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்தை ஸ்டாலின் போடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஜூன் மாதம் முயன்றாம் தேதி ஆரம்பிப்பதாக இருந்தாலும் அதற்கு சில நடைமுறைகள் இருப்பதால் இப்பொழுது கையெழுத்துப் போட்டால் தான் செயல்பாட்டுக்கு வர இயலும் என்ற காரணத்தால், அதில் கையெழுத்திட இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதிலும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விதத்தில் அதற்கான கூப்பிடும் கையெழுத்திடுவார் ஸ்டாலின் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரத்தை 30 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் தாலிக்கு சுமார் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் ஒப்புதல் அளிக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து பல முக்கிய அறிவிப்புகளையும் அவர் கையெழுத்திடுவார் என்று சொல்லப்படுகிறது.