10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா? அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!

Photo of author

By Kowsalya

10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா? அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!

Kowsalya

வேலை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது.

அரசு சார்பில் படித்த வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி மாதம் ஒன்றுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஊனமுற்றோர் மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகையை வழங்கி வருகிறது. இப்பொழுது அனைவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.

நீங்கள் விண்ணப்பிக்காமல் இருக்கும் நபர் என்றால் தங்களது ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரடியாக சென்று கிண்டி பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSLC தேர்ச்சி, மற்றும் 12 ஆம் வகுப்பு  மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி பயின்றவர்கள் , வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வைத்து இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து 1 ஆண்டு பதிவு செய்து பூர்த்தி செய்திருந்தால் போதும்.

தகுதி:  SC., ST. பிரிவினருக்கு கடந்த மாதம் 30-ந் தேதி அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்க கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஒரு ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். முற்றிலும் வேலையில்லாதவராக இருந்தால் மட்டுமே உதவி தொகையை பெற முடியும். பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் படித்திருக்க வேண்டும். எந்தவொரு நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.