முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

0
126

தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 15 ஆயிரத்து 830 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 549 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில் இந்த நோயில் இருந்து பூரணமாக குணமடைந்து நேற்று வீடு திரும்புகிறார்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 43 ஆக இருக்கிறது. இதன் காரணமாக, வீடு திரும்பியவர்கள் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 90 ஆயிரத்து தொள்ளாயிரத்து 19 ஆக உயர்ந்திருக்கிறது.

நேற்று மட்டும் இந்த தொற்று நோயினால் பாதித்த 77 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் பலியான மக்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் இந்த தொற்றுநோய் தன்னுடைய கோரத்தாண்டவத்தை இந்தியாவில் ஆடி வருகிறது. அதே சமயத்தில் தமிழக அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்து இந்த நோய்த் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு தீவிரமான முயற்சியை செய்து வருகிறது.

தற்சமயம் வரை 45 வயதிருக்கும் அதிகமானோருக்கு இந்த இலவச தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை இருப்பவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன. ஆகவே முதல் கட்டமாக 150 கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டு இருக்கின்றார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பாக வெளியீடு பெற்றிருக்கின்ற ஒரு அறிவிப்பில் இந்தியாவிலேயே எல்லோருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான் நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் வேலைகள் தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டு இருக்கிறது தற்சமயம் வரையில் 45 வயது இருக்கும் அதிகமான நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது நேற்றுவரை 55.51 லட்சம் நபர்களுக்கு இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

அதேபோல மே மாதம் 1ஆம் தேதி முதல் பதினெட்டு வயது முதல் 44 வயதுவரை இருப்பவர்களுக்கு முன்னரே அறிவித்தபடி இலவச தடுப்பூசி போடுவதற்கான வேலைகள் தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.. அதன்படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவின்படி தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முதல் கட்டமாக 150 கோடி தடுப்பூசிகளை தமிழக மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து கொடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleநகைக்கான கொலையா?காதலுக்கான கொலையா?மர்மம் தெரியாமல் தவிக்கும் போலீசார்!
Next articleபழிவாங்கும் கொரோனா! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!