குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Photo of author

By Parthipan K

குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்திலுள்ள குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதி உதவி அளிக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் ஏற்கனவே பொங்கல் பரிசாக ரூபாய் இரண்டாயிரம் மற்றும் வேட்டி சேலை கரும்பு போன்ற பல்வேறு பொருட்கள் ஆளும் அதிமுக அரசினால் கொடுக்கப்பட்டது. இதை திமுக போன்ற எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதேபோல் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்து தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவைப் பெற்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த விவசாய கடன் தள்ளுபடி நிலம் அதிகமாக வைத்துள்ள விவசாயிகளே அதிக பயன் அடைவார் என்றாலும் இந்தத் திட்டத்தையும் தமிழக மக்கள் வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமி விவசாய கடன் தள்ளுபடி செய்ததற்கு காரணம் நாங்கள் தான் என்று ஸ்டாலின் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் காவலர்களுக்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் அதாவது தன்னுடைய உயிரை பணயம் வைத்து மக்களை காக்கும் நேரத்தில் உயிரிழந்த மற்றும் உடல்நிலை குறைவால் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த காவலர்களுக்கு தன்னுடைய இரங்கலையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இரங்கல் செய்திக்கும் மற்றும் நிதியுதவி அளித்ததற்கும் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து வருகிறார்கள்‌‌.