கண்துடைப்புக்காக கொடுப்பதை போல கொடுத்து ஏமாற்றிய அரசாங்கம்!  கொதித்தெழுந்த அஜித்குமாரின் சகோதரர்!

0
77
Sivaganga youth Ajith Kumar's death: Govt job, DMK govt gives 5 lakh compensation to brother
Sivaganga youth Ajith Kumar's death: Govt job, DMK govt gives 5 lakh compensation to brother

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற கோவில் காவலாளி 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு காவல் துறையினரால் கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆளும்கட்சியான் திமுகவையும், காவல்துறையினரையும் மக்களும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். அஜித்குமார் குடும்பத்தை சேர்ந்தவர்களும் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை அஜித்குமார் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று பிரச்சனை செய்தனர். பின்னர் தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு அரசு பணி தருவதாகவும், அஜித் குடும்பத்தின் பேரில் பட்டா தருவதாகவும் உறுதி அளித்தார்.

பின்னர் பிரச்சனையில் ஒரு சுமூக நிலை ஏற்பட்டு அஜித்குமாரின் உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அஜித்தின் சகோதரர் நவீன்குமார் தனக்கு கொடுத்த அரசு பணியில் திருப்தி இல்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.

எனக்கு கொடுத்த அரசுப்பணி என்னுடைய வீட்டில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது எனக்கு ரொம்ப தூரம். அதேபோல அரசு கொடுத்த பட்டா நிலம் தண்ணீர் இல்லாத காட்டுக்குள் உள்ளது. இதில் எனக்கு திருப்தி இல்லை என பேட்டி கொடுத்துள்ளார் நவீன்குமார்.

Previous articleயார் சொல்வது உண்மை? பறிபோன பிஞ்சு குழந்தைகளின் உயிர்? கடலூர் ரயில் கோர விபத்து சம்பவம்!
Next articleநாளை நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம்! அரசு ஊழியர்கள் பங்கு பெற்றால் என்ன நடக்கும்? தலைமை செயலாளர் எச்சரிக்கை!