சலூன், பியூட்டி பார்லர் போறீங்களா? ஆதார் எடுத்துட்டு இத படிச்சுட்டு போங்க

Photo of author

By Parthipan K

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் நிறைய தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்திருந்தன.

அதில் முக்கியமாக முடிதிருத்தகம் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க்கப்படும் என்ற அறிவிப்பு ஆண், பெண் என அனைவரையுமே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் முடிதிருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • அழகு நிலையத்தின் நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது சோப்பு & தண்ணீர் கொண்டு கை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்
  • வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, அலைப்பேசி, ஆதார் விவரங்களை பதிவேட்டில் குறித்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பேப்பர் நாப்கின்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்
  • சேவையை தொடங்கும் முன் பணியாளர்கள் தங்களது கைகளை சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இதனை பின்பற்ற வேண்டும்
  • பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். அவர்கள் அடிக்கடி தங்களது கைகளால், வாய் மற்றும் மூக்கு பகுதியை தொடக்கூடாது.பணியாளர் அல்லது கடையின் உரிமையாளருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால், அவர்கள் எக்காரணம் கொண்டும் பணியில் ஈடுபடக் கூடாது. உடனே மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்
  • சமூக விலகலை பின்பற்றும் வகையில் ஒரே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு நேரம் ஒதுக்கி, அந்த நேரத்தில் மட்டும் வரச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாற்காலிக்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.
  • வரிசையில் குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே காத்திருக்க வேண்டும். அழகு நிலையம் / சலூன் தளங்கள், பொருட்கள் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
  • ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களுமே ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்யப்பட வேண்டும். பிளேடு உள்ளிட்டவை ஒருவருக்கு பயன்படுத்தியதை, வேறு ஒருவருக்கு பயன்படுத்தக்கூடாது.
  • வாடிக்கையாளர்கள் உள்ளே செல்லும் முன், சென்ற பின் கைகளை சானிடைசர், சோப்பு & தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இவையெல்லாம் நிபந்தனைகளின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.