இலவச உணவை நிறுத்திய அம்மா உணவகம்

0
80

மார்ச் 22ம் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதையடுத்து, ஏழை எளிய மக்கள், சாலையோர வியாபாரிகள், வெளிமாநில தொழிலாளர்களின் ஆகியோருக்கு உதவி கரம் நீட்டும் வகையில் 15 மண்டலங்களில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் இலவச உணவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் இலவச உணவுகளையும் அரசு தொடர்ந்து நீட்டித்து வந்தது. இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து இலவச உணவுகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு காலத்தில் சென்னையில் 6 கோடி ரூபாய் மதிப்புக்கு உணவுகள் வழங்கப்பட்டதாகவும், சுமார் ஒரு கோடி பேர் பயன்பெற்றதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விலைகளில் உணவு விற்கப்பட்டு வருகிறது.

author avatar
Parthipan K