தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்.!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

Photo of author

By Vijay

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்.!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

Vijay

தமிழகத்தில் முக்கிய அரசு விடுமுறை நாட்களின் போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று முஸ்லிம் பண்டிகையான மிலாடி நபியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் பார்களில் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிகளை மீறிய மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பு மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது