படிக்கும் போதே பஞ்சாயத்து தலைவர்! பெருமை கொள்ளும் இளைஞர் பட்டாளம்!

0
143

படிக்கும் போதே பஞ்சாயத்து தலைவர்!பெருமை கொள்ளும் இளைஞர் பட்டாளம்!

இன்று நடைபெற்ற விறுவிறுப்பான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி சந்தியாராணி 210 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்தாலும் களத்தில் இருக்கும் சவால்கள் மிக அதிகம், அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றிக்கனியை பறித்த சந்தியாராணிக்கு சமூக வளைதளத்தில் மக்கள் சார்பாக வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

இளைய சமுதாயத்தின் மனதில் ஊக்கமளித்த சந்தியா ராணியைப் போலவே, மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் உள்ள அரிட்டாப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவரைப்போலவே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்த சரஸ்வதி என்பவர் தனது அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

இறுதியான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Previous articleகடற்கரையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா?
Next articleகோலத்திற்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு ; அதிர்ச்சி தகவல்