கடுமையான மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வாக இந்த பானம் உள்ளது.இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)மிளகு – ஒரு தேக்கரண்டி
3)ஓமம் – ஒரு தேக்கரண்டி
4)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
6)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு,ஒரு தேக்கரண்டி ஓமம்,ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து அடுப்பு தீயில் குறைவாக வைத்து வறுக்க வேண்டும்.
நன்றாக வறுப்பட்டு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இதனை ஒரு தட்டில் கொட்ட வேண்டும்.அடுத்து வாணலி சூட்டில் ஒரு துண்டு கட்டி பெருங்காயத்தை போட்டு வறுக்க வேண்டும்.இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு காற்றுப்புகாத டப்பாவில் இந்த பொடியை கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் சீரகக் கலவையில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடாகி கொண்டிருக்கும் பானத்தில் சேர்க்க வேண்டும்.
இந்த பானம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.இந்த ஆரோக்கிய பானம் மலம் தேங்குவதை தடுக்கிறது.வாழ்நாளில் மலச்சிக்கல் பாதிப்பை சந்திக்காமல் இருக்க நீங்கள் இந்த பானத்தை அவசியம் செய்து குடிக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)பெருங்காயத் தூள் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி வைத்து வெந்தயம் ஒரு தேக்கரண்டி போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அரைத்த வெந்தயத் தூள் சேர்த்து சிறிது கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி பெருங்காயத் தூள் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.