சாகும் வரை சர்க்கரை நோய் வராமல் இருக்க.. இந்த டீ போட்டு குடிங்க!! இது அனுப்ப உண்மை!!

Photo of author

By Divya

சாகும் வரை சர்க்கரை நோய் வராமல் இருக்க.. இந்த டீ போட்டு குடிங்க!! இது அனுப்ப உண்மை!!

Divya

உயிர்க் கொல்லி நோயான சர்க்கரை வராமல் இருக்க இங்கு கொடுக்கப்படுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள்:-

**இனிப்பு உணவுகள்
**மோசமான உணவுப் பழக்கம்
**ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை
**குடும்ப வரலாறு

தேவையான பொருட்கள்:-

1)ஒரு துண்டு இலவங்கபட்டை
2)ஒரு துண்டு இஞ்சி
3)ஒரு கிளாஸ் தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு லேசாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு இடித்த பட்டை மற்றும் இஞ்சி துண்டை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸிற்கு இதை வடிகட்டி கொள்ள வேண்டும்.இதை தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் வற்றல் – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு துண்டு நெல்லிக்காய் வற்றலை பாத்திரத்தில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த நெல்லிக்காய் பானத்தை வடித்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடிக்க வேண்டும்.

அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதில் வெந்தயப் பொடி ஒரு தேக்கரண்டி கலந்து குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் இரத்த சர்க்கரை உயராமல் இருக்கும்.