பெரியவர்களைவிட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தான் மாரடைப்பு அதிகரித்து வருகிறது.தற்பொழுது நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியம் இல்லாதவையாக மாறிவிட்டது.என்ன உணவு சாப்பிடுகின்றோம் அதில் என்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கிறது.தற்பொழுது ஆரோக்கியத்தை தள்ளி வைத்துவிட்டு ருசி நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதன் விளைவே மாரடைப்பிற்கு காரணமாக இருக்கிறது.
இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பன்னீர் ரோஜா இதழ்
2)துளசி இலைகள்
3)கறிவேப்பிலை
4)புதினா
5)சீரகம்
6)வெல்லம்
7)மிளகு
செய்முறை விளக்கம்:-
ஒரு கப் பன்னீர் ரோஜா இதழ்களை சேகரித்து தண்ணீரில் கொட்டி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு கால் கப் துளசி இலை,கால் கப் கறிவேப்பிலை மற்றும் சிறிது புதினா இலைகளை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது மிக்சர் ஜாரில் பன்னீர் ரோஜா இதழை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து துளசி,கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அரை தேக்கரண்டி சீரகத்தை மிக்சிர் ஜரரில் போட்டு பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி கருப்பு மிளகை மிக்சர் ஜாரில் பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு அரைத்த பன்னீர் ரோஜா விழுதை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் அரைத்த கறிவேப்பிலை கலவையை போட்டு நன்றாக வதக்குங்கள்.
அடுத்ததாக அரைத்த சீரகத் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குறைந்த தீயில் வதக்க வேண்டும்.பிறகு 50 கிராம் அளவிற்கு வெல்லம் எடுத்து பொடித்து வெந்து கொண்டிருக்கும் கலவையில் போட்டு கலந்துவிட வேண்டும்.இவை நன்றாக வெந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இந்த கலவையை ஆறவைத்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.தினமும் காலை மாலை என ஒரு ஸ்பூன் இந்த பேஸ்ட் சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள்:-
1)வில்வ இலை
2)சதகுப்பை
3)கரு மிளகு
4)திப்பிலி
5)பனங்கற்கண்டு
6)வெற்றிலை
செய்முறை விளக்கம்:-
முதலில் ஐந்து வில்வ இலைகளை சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் எட்டு கரு மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நான்கு திப்பிலி,ஒரு தேக்கரண்டி சதக்குப்பை மற்றும் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வெற்றிலை எடுத்து காம்பு நீக்கிவிட்டு அரைத்த விழுதை போட்டு மடக்கி மென்று சாப்பிட வேண்டும்.இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.மாரடைப்பு,நெஞ்சு வலி,இதய பலவீனம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.