இரத்த சர்க்கரை அளவு மீறாமல் இருக்க.. இந்த பூவில் தேநீர் போட்டு குடிங்க!!

0
9

சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது.இந்த சர்க்கரை நோய் தங்கள் கட்டுப்பாட்டிற்கு வர நீங்கள் ஆவாரம் பூ,நித்தியகல்யாணி பூவில் டீ செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)இருநூறு மில்லி தண்ணீர்
2)ஒரு டேபுள் ஸ்பூன் ஆவாரம் பூ பொடி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஆவாரம் பூவை வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 200 மில்லி அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

பிறகு ஒரு டேபுள் ஸ்பூன் ஆவாரம் பூ பொடியை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.இந்த ஆவாரம் பூ பானம் கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

பிறகு இந்த பானத்தை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி பருகுங்கள்.காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த பானத்தை பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வரும்.

தேவையான பொருட்கள்:-

1)ஒரு டேபுள் ஸ்பூன் ஆவாரம் பூ
2)அரை டேபுள் ஸ்பூன் வெந்தயம்
3)ஒரு டேபுள் ஸ்பூன் நித்தியகல்யாணி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஆவாரம் பூ மற்றும் நித்தியகல்யாணி பூ ஒரு டேபுள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் அரை டேபுள் ஸ்பூன் வெந்தயம் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகுங்கள்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் பார்க்காமல் இருப்பீர்கள்.

ஆவாரம் பூவில் ட,ஆவாரம் பூ ரசம் போன்வற்றை செய்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவை மீறாமல் இருக்கும்.

Previous articleகோழியின் இந்த பாகம் 100 மடங்கு நமக்கு ஆரோக்கிய பலன்களை அள்ளிக்கொடுக்கும்!!
Next articleதேனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால்.. வறட்டு இருமல் சட்டுனு நீங்கிவிடும்!!