சாகும் வரை மூட்டு வலி இடுப்பு வலி பிரச்சனையை சந்திக்காமல் இருக்க.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

Photo of author

By Divya

சாகும் வரை மூட்டு வலி இடுப்பு வலி பிரச்சனையை சந்திக்காமல் இருக்க.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

Divya

மூட்டு பகுதியில் வலி வீக்கம் வருதல்,இடுப்பு வலித்தல்,முதுகு பகுதியில் வலி வருதல் போன்ற எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர்.எலும்புகளின் அடர்த்தி குறைதல்,எலும்பு தேய்மானமாதல் போன்ற காரணங்களால் சிறிய வயதிலேயே இதுபோன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி பாதிப்பு வராமல் இருக்க இந்த பானம் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)கேழ்வரகு மாவு – 100 கிராம்
2)பாதாம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி
3)முந்திரி பருப்பு – இரண்டு தேக்கரண்டி
4)பனங்கற்கண்டு – 25 கிராம்
5)பசும் பால் – ஒரு கப்
6)பேரிச்சம் பழம் – இரண்டு
7)ஆப்பிள் பழம் – ஒன்று
8)தாமரை விதை – 25 கிராம்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கேழ்வரகு எடுத்து வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து சல்லடை கொண்டு சலித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து தாமரை விதை 25 கிராம்,இரண்டு தேக்கரண்டி பாதாம் பருப்பு மற்றும் இரண்டு தேக்கரண்டி முந்திரி பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.

3.பிறகு ஒரு ஆப்பிள் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்னர் பாத்திரம் ஒன்றில் கேழ்வரகு மாவை கொட்டி தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.கேழ்வரகு கூழ் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

4.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அரைத்து வைத்துள்ள பாதாம் பருப்பு கலவையை அதில் சேர்க்க வேண்டும்.அதன் பிறகு பேரிச்சம் பழம் மற்றும் காய்ச்சாத பசும் பால்,இனிப்பு சுவை தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

இந்த பானத்தை காலை நேரத்தில் டீ குடிக்கு மாற்றதாக குடித்து வந்தால்சாகும் வரை மூட்டு வலி தொந்தரவை சந்திக்க மாட்டீங்க.