முக்கி மலம் கழிக்கும் நிலைமை வராமல் இருக்க.. இந்த பானத்தை காலையில் குடிங்க!!

Photo of author

By Divya

முக்கி மலம் கழிக்கும் நிலைமை வராமல் இருக்க.. இந்த பானத்தை காலையில் குடிங்க!!

Divya

உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை முழுமையாக சரி செய்யும் வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்:

1)நார்ச்சத்து குறைபாடு
2)செரிமானக் கோளாறு
3)மோசமான உணவுமுறை பழக்கம்
4)நீர்ச்சத்து குறைபாடு

மலச்சிக்கலை குணப்படுத்த பின்பற்ற வேண்டிய வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)மாவிலை – இரண்டு
2)கொய்யா இலை – இரண்டு
3)நுனா இலை – இரண்டு
4)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் மாவிலை,கொய்யா இலை,நுனா இலை ஆகியவற்றை தலா இரண்டு என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அரைத்த இலை விழுதை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த கஷாயம் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இந்த கஷாயத்தை கிளாஸிற்கு வடித்து பருகலாம்.இப்படி தினமும் இந்த கஷாயத்தை செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு கொய்யா இலையை பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.கொய்யா இலை பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.அதேபோல் எலுமிச்சை பானம் பருகி வந்தால் குடல் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் சுடுநீர் பருகினால் மலச்சிக்கல் அடியோடு நீங்கும்.