நாம் அறிந்திராத மூலிகைகளில் ஒன்றுதான் விஷ்ணுகிரந்தி.இந்த மூலிகையில் டீ,கஷாயம் போன்ற பானங்கள் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அடிக்கடி ஞாபக மறதி பிரச்சனையை அனுபபிப்பவர்கள்,மறந்த பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வர விரும்புபவர்கள் விஷ்ணுகிரந்தி பூவில் டீ செய்து குடிக்கலாம்.
விஷ்ணுகிரந்தி பூவில் டீ தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:-
1)விஷ்ணுகிரந்தி பூ செடி – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் விஷ்ணுகிரந்தி பூ செடியை வேருடன் பிடுங்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இந்த செடியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள விஷ்ணுகிரந்தி செடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்கு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை நேரத்தில் டீ போட்டு குடித்து வந்தால் மூளையின் செயல்திறன் மேம்படும்.
உங்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை இருந்தால் இந்த விஷ்ணுகிரந்தி டீ போட்டு குடிக்கலாம்.விஷ்ணுகிரந்தி டீ நரம்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.பல் வலியை குணமாக்கும் விஷ்ணுகிரந்தி மூலிகையை பொடித்து தினமும் சாப்பிட்டு வந்தால் பற்களின் வலிமை அதிகரிக்கும்.
விஷ்ணுகிரந்தி மூலிகையில் கஷாயம் செய்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.இரைப்பை நோய் குணமாக விஷ்ணுகிரந்தி பூவை உலர்த்தி பொடித்து டீ போட்டு குடிக்கலாம்.விஷ்ணுகிரந்தி பூவை அரைத்து பாலில் கலந்து குடித்தால் உடல் சூடு தணியும்.
சளி குணமாக விஷ்ணுகிரந்தி பூவில் டீ செய்து குடிக்கலாம்.விஷ்ணுகிரந்தி பொடி மற்றும் ஆடாதோடை பொடி சம அளவு எடுத்து வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.