பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் உள்ள பலர் பயனடைந்து வரக்கூடிய நிலையில், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் பெற யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சில முக்கிய கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கிறது.
இலவச சமையல் எரிவாயு வர தகுதியானவர்கள் :-
✓ கணவனை பிரிந்த மற்றும் கணவனை இழந்த பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதியானவர்கள்.
✓ எல்பிஜி இணைப்பு இல்லாத கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு தகுதி உண்டு.
✓ பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதி உண்டு
✓ மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாக வாழக்கூடிய மூத்தக்குடி மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பட பகுதி உண்டு.
✓ ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் இருக்கும் பட்சத்தில் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
மேல்கூறிய தகுதிகள் உள்ளவர்கள் தங்களுடைய கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரடியாக சென்று விண்ணப்பத்தார்களை பெற்று அதனுடன் ஆதார் அட்டை வருமானச் சான்றிதழ் இருப்பிட சான்று போன்ற முக்கிய சான்றிதழ் நகலெடுத்து வழங்குவதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.