கொடிய நோயான கேன்சர் பாதிப்பில் இருந்து மீள்வது கடினமான ஒரு விஷயமாகும்.அப்படி இருக்கையில் இந்த கேன்சர் பாதிப்பில் இருந்து மீள வெண்பூசணி ஜூஸ் செய்து பருகலாம்.
தேவையான பொருட்கள்:-
1)வெண்பூசணி துண்டுகள் – ஒரு கப்
2)எலுமிச்சம் பழம் – ஒன்று
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு சிறிய வெண்பூசணியை எடுத்து அதன் தோலை நீகுக்குங்கள்.அதன் பிறகு வெண்பூசணி காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு மிக்சர் ஜாரில் வெண்பூசணி துண்டுகளை போடுங்கள்.அடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வெண்பூசணி ஜூஸை கிளாஸிற்கு வடித்து எலுமிச்சை சாறு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் கலந்து பருக வேண்டும்.இப்படி தினமும் ஒரு கிளாஸ் வெண் பூசணி ஜூஸ் பருகி வருபவர்கள் விரைவில் கேன்சரில் இருந்து மீள்வார்கள்.
வெண்பூசணி ஜூஸின் பயன்கள்:-
1.வயிறு எரிச்சல் குணமாக வெண்பூசணி ஜூஸ் பருகலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
2.குடல் ஆரோக்கியம் மேம்பட வெண்பூசணி ஜூஸ் பருகலாம்.வெண்பூசணி சாறில் இருக்கின்ற நீர்ச்சத்து சரும வறட்சியை தடுக்கிறது.
3.இருமல்,சளி போன்ற நோய் பாதிப்புகள் குணமாக வெண்பூசணி ஜூஸ் குடிக்கலாம்.
4.உடல் எடையை குறைக்க வெண்பூசணி ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.மலச்சிக்கல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் வெண்பூசணியை ஜூஸாக அரைத்து பருகலாம்.
5.வெண்பூசணி ஜூஸில் வெற்றிலை சாறு,மிளகுத் தூள் சேர்த்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.