உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகினால் அவை உடனடியாக கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)ஏலக்காய் – ஒன்று
2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)துளசி விதை – கால் தேக்கரண்டி
4)கிராம்பு – ஐந்து
5)தோற்றான் விதை பொடி – கால் தேக்கரண்டி
6)அஸ்வகந்தா பொடி – அரை தேக்கரண்டி
7)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
8)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு ஏலக்காயை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதர பொருட்களை சொல்லிய அளவுபடி வாங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் ஒரு ஏலக்காயை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஐந்து கிராம்பை இடித்து அந்நீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு கால் தேக்கரண்டி துளசி விதை,அரை தேக்கரண்டி தோற்றான் விதை பொடி, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம்,அரை தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை தயாரித்த பானத்தில் பிழிந்துவிட வேண்டும்.இந்த பானத்தை பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)துளசி இலைகள் – 10
2)பூண்டு பற்கள் – இரண்டு
3)சுக்கு – ஒரு துண்டு
4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இரண்டு பல் பூண்டை அதில் தட்டிப்போட்டு கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கி இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் 10 துளசி இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
அதன் பிறகு பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.இந்த பானத்தை பருகினால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.