உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

Photo of author

By Divya

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

Divya

  • நம் உடலில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.உடல் பருமன்,அதிக உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது.இந்த பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றி பலனடையவும்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைப்பழம் – ஒன்று
2)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கனிந்த வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு வட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

பால் கொதிக்கும் தருணத்தில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத்தை போட்டு ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பிறகு சிறிது நேரம் பாலில் வாழைப்பழம் ஊறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த வாழைப்பழப் பாலை பருகவும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம்,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இவை உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)மாதுளை – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு மாதுளம் பழத்தை தோல் நீக்கிவிட்டு பழ விதைகளை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.மாதுளம் பழத்தில் உள்ள நொதி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – கால் கப்
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் கறிவேப்பிலையை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை கறிவேப்பிலை ஜூஸில் கலந்து பருகி வந்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு குணமாகும்.