நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் இலவங்கப்பட்டையில் இருக்கின்றது.பிரியாணி,கறிக்குழம்பு போன்ற உணவுகளின் ருசியை கூட்டும் இலவங்கப்பட்டையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக நிறைந்திருக்கிறது.
இலவங்கப்பட்டையை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.டீ,காபி போன்ற உடலுக்கு கேடு தரும் பானங்களுக்கு பதில் இலவங்கப்பட்டையில் தேநீர் செய்து குடித்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இலவங்கப்பட்டை தேநீர் நன்மைகள்:
**சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாக இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடிக்கலாம்.சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையில் தேநீர் செய்து குடித்தால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.
**உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை தேநீர் குடிக்கலாம்.உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட இலவங்கப்பட்டை தேநீர் பருகுவது நல்லது.
**இதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பு கரைய இதய ஆரோக்கியம் மேம்பட இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடிக்கலாம்.
**பெண்களுக்கு சரியான நேரத்தில் மாதவிடாய் வர இலவங்கப்பட்டை தேநீர் உதவும்.பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகா இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடிக்கலாம்.
இலவங்கப்பட்டை தேநீர் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
1.இலவங்கப்பட்டை – ஒன்று
2.தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு இலவங்கபட்டை துண்டு எடுத்து உரலில் போட்டு இடித்து பொடித்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
அதன் பிறகு அரைத்த இலவங்கப்பட்டை பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த இலவங்கபட்டை பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு குடிக்கலாம்.