வாந்தி கட்டுப்பட.. இந்த கஷாயம் வச்சி குடிங்க!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

வாந்தி கட்டுப்பட.. இந்த கஷாயம் வச்சி குடிங்க!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

Divya

உங்களுக்கு அடிக்கடி வாந்தி,குமட்டல் பிரச்சனை இருந்தால் அதில் இருந்து முழுமையாக மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – இரண்டு தேக்கரண்டி
2)பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த கொத்தமல்லி விதையை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து பனங்கற்கண்டை அதில் போட்டு கொதிக்க வைக்க வைத்து வடித்து பருகினால் வாந்தி நிற்கும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு தட்டிய இஞ்சை அதில் சேருங்கள்.

பிறகு இந்த இஞ்சி பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த பானத்தை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் வாந்தி நிற்கும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் எலுமிச்சை சாறு ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் சிறிதளவு தேன் கலந்து பருகினால் வாந்தி,குமட்டல் கட்டுப்படும்.