சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாகிறது.குறிப்பாக தோலில் வேனல் கட்டிகள் வந்து வலி,எரிச்சலை ஏற்படுத்தும்.எனவே வேனல் கட்டி குணமாக இந்த நான்கு வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.
தீர்வு 01:
வேப்பிலை
ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை வேனல் கட்டிகள் மீது பூசி நன்றாக காய்ந்த பின்ன வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.இப்படி செய்தால் வேனல் கட்டி குணமாகும்.
தீர்வு 02:
மஞ்சள் தூள்
குளிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொண்டால் வேனல் கட்டி கொப்பளங்கள் குணமாகும்.மஞ்சளில் இருக்கின்ற இயற்கை எதிர்ப்பு பண்புகள் வேனல் கட்டியை குணப்படுத்த உதவுகிறது.
தீர்வு 03:
வேப்ப எண்ணெய்
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது வேப்ப எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.பிறகு காட்டன் பஞ்சை அதில் போட்டு நினைத்து சூட்டு கொப்பளம் மீது வைத்து ஒத்தி எடுக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சூட்டு கொப்பளம் குணமாகும்.
தீர்வு 04:
வேப்பிலை பொடி
நல்லெண்ணெய்
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி வேப்பிலை பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
பிறகு இதை வேனல் கட்டி மீது தடவி நன்றாக உலர்த்த வேண்டும்.அதன் பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு வேனல் கட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் சூட்டு கொப்பளங்கள் குணமாகும்.