குடல் அல்சர் புண் குணமாக.. இந்த எண்ணையை தினமும் காலையில் 10 மில்லி குடிங்க!!

Photo of author

By Divya

குடல் அல்சர் புண் குணமாக.. இந்த எண்ணையை தினமும் காலையில் 10 மில்லி குடிங்க!!

Divya

மோசமான உணவுமுறை பழக்கத்தால் வயிற்றுப்புண்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர்.

அல்சர் புண் பாதிப்பால் வயிற்றுப்போக்கு,ஆசனவாய் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

அல்சர் வருவதற்கான முக்கிய காரணங்கள்:

1)மோசமான உணவுமுறை பழக்கம்
2)உணவு தவிர்த்தல்
3)காரசாரமான உணவுகள்
4)புளிப்பு உணவுகள்
5)பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அல்சர் அறிகுறிகள்:

1)மலம் கழிப்பதில் சிரமம்
2)ஆசனவாய் எரிச்சல்
3)வயிறு எரிச்சல்
4)வயிற்று வலி

வயிற்றுப்புண் குணமாக வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)மாசிக்காய் பொடி
2)தேங்காய் பால்

செய்முறை விளக்கம்:-

மாசிக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.மாசிக்காய் வாங்கி பவுடராக அரைத்தும் பயன்படுத்தலாம்.

பிறகு ஒரு மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த தேங்காய் பாலை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மாசிக்காய் பொடியை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.இதை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எண்ணையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 மில்லி அளவு சாப்பிட வேண்டும்.இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் அல்சர் புண்கள் விரைவில் ஆறும்.