முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாக.. இந்த மூன்று பொருள் கொண்ட பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

Photo of author

By Divya

முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாக.. இந்த மூன்று பொருள் கொண்ட பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

Divya

இளம் வயதினர்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் மூட்டு தேய்மானம் பொதுவான பிரச்சனையாக இருக்கின்றது.முழங்கால் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானமகாமல் இருக்க எலும்புகளை வலிமைப்படுத்த வீட்டு வைத்தியங்களை செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – 3 டேபுள் ஸ்பூன்
2)கருஞ்சீரகம் – 2 டேபுள் ஸ்பூன்
3)வெந்தயம் – 3 டேபுள் ஸ்பூன்
4)தண்ணீர் – ஒரு கிளாஸ்

விரிவான செய்முறை விளக்கம்:-

பட்டியலிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இவற்றை வறுக்க வாணலி ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

அதற்கு அடுத்து எடுத்து வைத்துள்ள 3 டேபுள் ஸ்பூன் ஓமத்தை முதலாவதாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு 2 டேபுள் ஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் 3 டேபுள் ஸ்பூன் வெந்தயத்தை அதில் போட்டு அடுப்பு தீயை குறைவாக வைத்துக் கொண்டு வறுக்க வேண்டும்.

வாணலியில் போடப்பட்டுள்ள பொருட்கள் கருகிடாமல் இருக்க வேண்டும்.அதன் பிறகு இவற்றை நன்றாக ஆறவிட்டு மிக்சர் ஜாரில் கொட்டி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை ஒரு கண்ணாடி ஜாரில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதற்கு அடுத்து இந்த நீரை கிளாஸிற்கு ஊற்றி பொடித்து வைத்துள்ள பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி கலந்து பருக வேண்டும்.இந்த நீரை பருகி வந்தால் முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து – மூன்று தேக்கரண்டி
2)வெள்ளை உளுந்து – மூன்று தேக்கரண்டி
3)ஏலக்காய் – ஒன்று
4)தேங்காய் பால் – ஒரு கப்
5)நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

விரிவான செய்முறை விளக்கம்:-

கருப்பு உளுந்து மற்றும் வெள்ளை உளுந்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து பவுடர் பக்குவத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தேங்காய் பால் ஊற்றவும்.அடுத்து ஒரு ஏலக்காயை இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அரைத்த உளுந்து பொடியை அதில் கொட்டி கெட்டி பிடிக்காமல் கலந்துவிட வேண்டும்.அடுத்து அதில் இனிப்பு சுவைக்காக சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கஞ்சி காய்ச்ச வேண்டும்.இந்த உளுந்து பாலை பருகி வந்தால் முழங்கால் மூட்டு தேய்மானப் பிரச்சனை சரியாகும்.உடலுக்கு போதிய கால்சியம் சத்து கிடைப்பதோடு எலும்புகள் வலிமையாக இருக்கும்.