உங்கள் கால் ஆணி பிரச்சனையை எளிதில் குணப்படுத்த.. கல் உப்பை இப்படி பயன்படுத்துங்கள்!!
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கால் ஆணி பாதிப்பை ஒருமுறையாவது சந்தித்திருப்பீர்கள்.இது கால் அழுத்தம் அல்லது உராய்வினால் பாதத்தில் குறிப்பிட்ட பகுதி மட்டும் தடித்து காணப்படும்.இந்த கால் ஆணி வந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.அதிக வலி பாடாய் படுத்தி எடுக்கும்.
கால் ஆணியை கவனிக்காமல் விட்டால் அந்த இடம் நாளடைவில் மறுத்துவிடும்.நீங்கள் இந்த பாதிப்பை நீண்ட நாட்களாக சந்தித்து வருகிறீர்கள் என்றால் அதை மருத்துவர் உதவியுடன் அகற்றி விடுவது நல்லது.
தற்பொழுது தான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால் அதை வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்வது நல்ல முடிவாக இருக்கும்.
*கல் உப்பு
ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான நீர் ஊற்றி சிறிது கல் உப்பு சேர்த்து கலக்கி கால்களை ஊற வைக்கவும்.10 நிமிடங்கள் கழித்து கால்களை துடைத்து விடவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கால் ஆணி பாதிப்பிற்கு உரிய தீர்வு கிடைக்கும்.
*கற்றாழை ஜெல்
பிரஸ் கற்றாழை ஜெல் சரும பிரச்சனைகளை போக்க கூடியது.இந்த ஜெல்லை கால் ஆணி ஏற்பட்டிருக்கும் இடத்தில் அப்ளை செய்து வந்தால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.
*மஞ்சள் பேஸ்ட்
சூடான தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து கால் ஆணி மீது பூசினால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.
*சின்ன வெங்காயச் சாறு
ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி சின்ன வெங்காயச் சாறு சேர்த்து கால்களை ஊற வைக்கவும்.
பத்து நிமிடங்கள் கழித்து கால்களை நன்கு துடைக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் கால் ஆணி பாதிப்பு சரியாகிவிடும்.